tamilnadu

img

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த பாஜக!

ஜம்மு:

பத்திரிகையாளர்களுக்கு கவரில் பணத்தை வைத்து லஞ்சம் கொடுக்க முயன்றதாக, பாஜக மீது, காஷ்மீரின் ‘லே’ பத்திரிகையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ‘லே’ பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இரண்டு பக்க புகார் கடிதம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் மாநில பாஜக தலைவர் ரெய்னா மற்றும் எம்எல்சி விக்ரம் ரந்தாவா ஆகிய இருவரும் பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவுசெய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


இதை உறுதிப்படுத்திய ‘லே’ பத்திரிகையாளர் சங்கத் தலைவர் மொரூப் ஸ்டான்சின், “பாஜக-விரின் செயல்பாடு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, பத்திரிகையாளர் சங்கத்தின் புகார் கடிதத்தை, ட்விட்டரில் பகிர்ந்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “பாஜக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா மறுத்துள்ளார். “பாஜக இத்தகைய குற்றச்சாட்டுகளை சகித்துக் கொள்ளாது. பத்திரிகையாளர் சங்கம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றும் மிரட்டியுள்ளார்.


;